Saturday 5 September 2015



சரும பராமரிப்பு

முகத்தில் சுருக்கம் இல்லாதொழிய

* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
* நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

♣ தோல் சுருக்கம் நீங்கசிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழி...தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம்.முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.

♣ வறண்ட சருமத்தை பாதுகாக்க

* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
* தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவுஎடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போவதோடு, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
* தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

♣ சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும்

* நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.
* அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
* பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
* தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

♣ கருமை நீங்க

* ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
* இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

♣ இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல

* இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
கை, கால் பராமரிப்பு

♣ கருப்பு நிறம் மாற

 * கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

♣ வறண்ட தோல் மற்றும் சுருக்கம் நீங்கி தோல் மிருதுவாக

* தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஒலிவ் ஒயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
* தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

♣ நகம் பராமரிப்பு

* நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.
* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.
* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.
* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
* ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.
* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.
* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

♣ பாத வெடிப்பு நீங்க

* பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.
* உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.
* அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.
* பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும் -
 

Friday 4 September 2015

FACEBOOK இல் வரும் தேவையில்லாத GAME REQUESTS தடுப்பது எப்படி ?

FACEBOOK இல் வரும் தேவையில்லாத GAME REQUESTS தடுப்பது எப்படி ?


முகநூலில் பொழுதுபோக்கவும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவுமே பலர் வருகின்றோம். நான் போட்ட நிலை தகவல், அல்லது போட்டோ , பகிர்ந்த விஷயங்களுக்கு மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என பார்ப்பது ஒரு ஜாலியான விஷயம். ஆனால் பலர் கேம் ரிகுஸ்ட் கொடுத்தே அந்த ஜாலியை காலி செய்கின்றனர்


அப்படி அடிகடி தொல்லை செய்யும் நபர்களை எப்படி தடுப்பது, யாருமே நமக்கு ரிகுஸ்ட் தராமல் தடுப்பது எப்படி என்பதே இன்றைய பதிவு. இது எளிதான முறைதான். நீங்களும் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செயுங்கள்.


1. முகநூலில்  ‘Settings’ from the drop-down menu on your Facebook homepage.

2.  அதில் இடதுபுறம் உள்ள  ‘Apps’ ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள் ..

3. அதில் " Apps, Websites and Plugins box. " என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.

4.  "Disable Platform" என்னும் பட்டனை கிளிக் செய்யவும்.

5. இப்பொது  "Disabled’ in the Apps, Websites and Plugins box." என்று தோன்றும்.

       இனி யாரும் உங்களுக்கு கேம் ரிகுஸ்ட் அல்லது ஏதாவது ஆப் ரிகுஸ்ட் கொடுக்க முடியாது.


குறிப்பு :

இதையும் மீறி ஏதாவது செய்தால் கீழே உள்ள படத்தை அவருக்கு வாட்சபில் அனுப்புங்கள்.