Saturday 17 September 2016

தங்க நகைகள் எப்போதும் பொலிவுடன் இருக்க டிப்ஸ்

ஆபரணங்கள் புதிதாக வாங்கியபோது இருந்த பொலிவு, எப்போதும் நீடித்திருக்க, அதற்கான பராமரிப்பை நாம் கொடுத்தாக வேண்டும்.






ஆபரணங்கள் புதிதாக வாங்கியபோது இருந்த பொலிவு, எப்போதும் நீடித்திருக்க, அதற்கான பராமரிப்பை நாம் கொடுத்தாக வேண்டும். அதற்கு…

1. தங்க நகைகளை அணிந்து, கழற்றி வைக்கும்போது, சோப்பு நுரையில் நன்கு அலசி, மென்மையான காட்டன் துணியில் துடைத்து பத்திரப்படுத்தி வைத்தால் எப்போதும் பொலிவுடன் இருக்கும்.

2. அதேபோல, அதிக நாட்கள் நகைப் பெட்டியில் வைத்த நகைகள் செம்மை நிறம் படிந்தோ… பச்சை நிறம் படிந்தோ காட்சி அளிக்கலாம். அதை, பெட்டியிலிருந்து எடுத்து அப்படியே அணியாமல், சோப் நுரையில் அலசி அணிந்தால், ‘புத்தம் புது மலரே’ என பொலிவாக இருக்கும்.

3. அன்றாட பயன்பாட்டுக்கு எப்போதும் போட்டிருக்கும் வளையல், கம்மல் போன்ற நகைகள் பாலிஷ் மங்கி காணப்படும். அவற்றை உடனடியாக பளபளக்க வைக்க ஷாம்புவினால் கழுவலாம். அல்லது, பூந்திக்கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து, அந்தத் தண்ணீரில் கழுவி, மென்மையான துணியால் துடைக்க… ‘தகதக’வென மின்னும்.

4. எப்போதாவது ஒருமுறை அணியும் ஆரம், நெக்லஸ், கல் வளையல் போன்ற நகைகளை ஒன்றோடு ஒன்று உரசாமல், வளையாமல், அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டிகளில் தனித்தனியாக வைப்பது சிறந்தது.

5. நகைகளை அலுங்காமல், குலுங்காமல் வைக்க நகைப்பெட்டி இல்லை அல்லது இருப்பவை போதவில்லை… பீரோவில்தான் வைக்க வேண்டும் என்ற நிலை. என்ன செய்வது..? நகைகளை ‘பனியன்’ மாதிரியான காட்டன் துணியில் சுற்றி, பீரோ லாக்கரினுள் வைக்கலாம். பத்திரமாக இருக்கும். நகைப் பெட்டியில் வைத்தாலும்கூட, அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத நகைகளை இப்படி துணி சுற்றி, அந்தப் பெட்டிக்குள் வைத்தால் பளபளப்பு குறையாது.

No comments:

Post a Comment