Tuesday 15 September 2015

உதடு வெடிப்பை நீக்கும் குறிப்புகள்

உதடு வெடிப்பை நீக்கும் குறிப்புகள்
 
உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது. குளிர்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது.

இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா? என்ன தான் வகை வகையான உதடு பாம்கள் தடவியும் கூட இந்த பிரச்சனை தீரவில்லையா? என்ன செய்வது என்பதே புரியவில்லையா? கவலையை விடுங்கள்.

நமக்கு கை கொடுக்க தான் இயற்கையான பொருள் இருக்கிறது அல்லவா?  அது தான் தேங்காய் எண்ணெய். அதிலுள்ள பல்வேறு வகையான உடல்நல பயன்கள் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான்.

தலைமுடியில் ஆரம்பித்து பாதம் வரை அதை பயன்படுத்தலாம். அது நமக்கு அளித்திடும் பல பயன்களில் ஒன்று தான் உதடு வெடிப்பிற்கான தீர்வு.

பொதுவாகவே நம் உடலில் வெட்டுக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனே தேங்காய் எண்ணெய்யை அங்கே தடவ சொல்லுவார்கள். அதற்கு காரணம் அதிலுள்ள குணப்படுத்தும் ஆற்றலே. அதே தான் உதடு வெடிப்பிற்கும்! ஏற்கனவே சோதிக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு இந்த ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடு மென்மையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இறுதியில் ஒரு துணியை கொண்டு உதட்டை துடைத்து விட்டு அதனை காய வையுங்கள்.


இளநரைக்கு இயற்கை எண்ணெய்

இளநரைக்கு இயற்கை எண்ணெய்


இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும்.

சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், லோகபஸ்மம் (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) இவற்றைக் காய்ச்சி அந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்குப் பயன்படுத்தலாம். கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அதன் சத்து முழுவதும் எண்ணெயில் இறங்கும்வரை காய்ச்சி இந்த எண்ணெயை தினசரி உபயோகிக்கலாம்.

கடுக்காய் காய்ச்சிய நீரை தலை கழுவ பயன்படுத்தலாம். மருதாணி இலையை நன்கு அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது நரைமுடிக்கான சாயம்போல் பயன்படும். சிலமணி நேரம் கழித்துக் கழுவினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும்.

செம்பருத்திப் பூக்களை நிழலிலும் வெயிலிலுமாகக் காயவைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதனை நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி அதிக கட்டியான தேயிலை நீரினால் தலையைக் கழுவுவதுதான். வாரத்தில் இரண்டுமுறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.
 

தக்காளி பேஷியல் செய்வது எப்படி

தக்காளி பேஷியல் செய்வது எப்படி?


கரும்புள்ளி, கருமையும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதா? கவலைப்படாதீர்கள். உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது தக்காளி பேஷியல்.

உருளைக்கிழங்கு துருவல் சாறு – 1 டீஸ்பூன்,
தக்காளி விழுது – அரை டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். ரொம்ப நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்கதாவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும்.

அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும்.

முகப்பரு தழும்பாக மாற காரணம் என்ன?

முகப்பரு தழும்பாக மாற காரணம் என்ன?


முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகளால் பரு வரலாம். அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் இதற்குக் காரணம். இளம் வயதினருக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பருக்கள் வரலாம். பரு தானாகப் பழுக்கும் வரை விட்டால் முழுமையாகப் பழுத்ததும் காய்ந்து, அதன் மேலே படலம்போல் ஒட்டிக்கொண்டிருந்த தோல் வெளிப்பட்டுவிடும்.

வடு இருக்காது. கைகளால் நெருடிக் கிள்ளிவிடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக, நிலைத்து விடும். அடிக்கடி பருக்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு. பருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும்.

கிள்ளுவதால் அரைகுறையாகப் பழுத்த பருக் கட்டி உடைந்து, அதனால் சுற்றுப்புற அழற்சி அதிகமாகி முகமெல்லாம் வீங்கி, காய்ச்சல், கடும் வேதனை போன்றவை ஏற்பட்டுப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுவதும் உண்டு. இனிப்புப் பண்டங்கள் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். முக்கியமாக சாக்லேட், பாலேடு இனிப்புகளைத் தவிர்க்கலாம்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை லேசான மலமிளக்கிகளைச் சாப்பிடலாம். குளிக்கும்போது உடலைத் தினமும் ஈரிழைத் துண்டால் அழுத்தித் தேய்த்துக் குளிப்பது நல்லது. முகத்துக்கு அதிகம் சோப்பு தேய்ப்பதைக் குறைத்துவிடுவது நல்லது. பயறு, கடலை, அரிசி போன்ற மாவுகளைத் தேய்த்து எண்ணெய்ப் பிசுக்கை அகற்றலாம். முகத்தையும் ஈரிழைத் துண்டால் தேய்த்துவிடுவதால் வியர்வைக் கோளங்களைச் சுற்றியுள்ள தசைகள் வலுவுற்று துவாரங்கள் அதிகம் பெருக்காமலும், கொழுப்பின் கசிவு, அழுக்கு தங்காமலும் அழற்சி அடையாமலும் பாதுகாக்க முடியும். 

பருக்களை போக்கும் விஸ்கி ஃபேஷ் பேக்

பருக்களை போக்கும் விஸ்கி ஃபேஷ் பேக்

 

பருக்களைப் போக்க ஆல்கஹால் பயன்படும். ஏனெனில் ஆல்கஹாலில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களைப் போக்கும் பொருட்கள் உள்ளது. விஸ்கியைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சீக்கிரம் பருக்களைப் போக்கலாம். குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு விஸ்கி சற்று எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே சென்சிடிவ் சருமத்தினர் விஸ்கியை நீரில் கலந்து பயன்படுத்தலாம்.

ஒரு எலுமிச்சையைக் பிழிந்து சாறு எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் விஸ்கியை சேர்த்து கலந்து, பஞ்சு பயன்படுத்தி முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், ஒரே வாரத்தில் பருக்கள் மறைந்து, முகம் பொலிவோடு இருப்பதைக் காணலாம். 1 ஸ்பூன் விஸ்கியுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பருக்களை விரைவில் மறையும்.

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது பருக்களால் சரும செல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைத் தடுக்கும். அத்தகைய க்ரீன் டீயை, 1 டேபிள் ஸ்பூன் விஸ்கியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவினால், பருக்கள் படிப்படியாக மறைந்துவிடும்.

Tuesday 8 September 2015

கண்ணாடி அணியும் பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

கண்ணாடி அணியும் பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்



* நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்துதான். உங்கள் புருவம் சீர்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.

* கண்இமை, ரோமங்களை சுருட்டிவிடுங்கள்.

* பெண்கள் ஐ-ஷேடோவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் கண்ணாடி பின்புறத்தை நசநசவென ஆக்கிவிடும். நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள்.

* பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள். 

* நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை உங்கள் கண்களை சிறியதாக காட்டுமா அல்லது பெரிதாக காட்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக்அப் செய்யும்போது, உங்கள் கண்கள் சிறியதாக தெரிந்தால் கண்களை சுற்றி ஐ-லைனரை பயன்படுத்துங்கள். ஒருவேளை, கண்கள் பெரியதாக தெரிந்தால் அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள்.

* உடனடி அழகு மற்றும் அடர்த்தியான தோற்றத்தை பெற சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்தியான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள்.

* கன்னங்களுக்கு பிங்க் நிற ப்ளஷரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இளம் பெண்கள் விரும்பும் பச்சி வேலைப்பாடு நகைகள்

இளம் பெண்கள் விரும்பும் பச்சி வேலைப்பாடு நகைகள்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்ததுதான் பச்சி ஜூவல்லரி. இந்த வேலைப்பாடு மிகவும் நுணுக்கமான அழகிய வடிவமைப்பு கொண்டதுதான். பழம் பெறும் கலையான இந்த பச்சி கரிகாரி வேலைப்பாடு முப்பரிமாண வடிவமைப்பை கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது. கண்ணாடி கற்கள், வண்ண பச்சி இலைகள் மற்றும் முத்துக்களை கொண்டு இந்த நகைகள் செய்யப்படுகின்றன.

தங்கத்தகடுகளை வளைத்து நடுவில் மரகதம், கொம்பு போன்ற பட்டை தீட்டாத கற்களை பதித்து இலைகள் செய்யப்படுகின்றன. இந்த இலைகள் ஓர் அடுக்கு ஈர் அடுக்க என்று பல அடுக்குகளாக இணைக்கப்பட்டு முப்பரிமானத்தில் திகழ்கிறது. இந்த வேலைப்பாடு கொண்ட நகைகள் முழுக்க முழுக்க கைகளால் செய்யபடுவதாகும்.

அழகாக செய்யப்படும் இந்த வேலைப்பாட்டை கொண்ட பதக்கங்களை முத்துக்கள், வண்ண கண்ணாடி கற்கள் அல்லது தங்கச் சரடுகளில் கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்ளலாம். பச்சி வேலைப்பாடுகளை கம்மல், வளையல், நெக்லஸ், பென்டன்ட் என்று பல நகைகளில் காண முடிகிறது. பராம்பரிய நகை வேலைப்பாடான இதை தற்காலத்திய நவீன டிசைன்களில் புகுத்தி ஃப்யூஷன் நகைகளும் செய்யப்படுகின்றன. இந்த வேலைப்பாட்டை கொண்ட கங்கன் மிகவும் அழகாக இருக்கிறது.

சிறுசிறு இலைகள் பலவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி உருட்டையாக  செய்யப்படும் இந்த கங்கன், கெம்பு, பச்சை கல் மற்றும் முத்துக்கள் இணைந்து மிக நேர்த்தியாக கிடைக்கிறது, வித்தியாசமான நகைகளை அணிய விருப்பம் கொண்ட பெண்கள் பச்சி வேலைப்பாடு நகைகளை நிச்சயம் விரும்புவர்.