Sunday 6 September 2015

பளீச் அழகு பெற

பளீச் அழகு பெற




இத்தலைமுறையினர் வெளிப்புற அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஒருவரின் வெளிதோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை கணக்கிட கூடாது என்றாலும், பெருன்பான்மையானவர்கள் பிறரின் முக அழகு, சரும நிறம் ஆகியவற்றை வைத்துதான் மக்களை எடை போடுகிறார்கள்.

பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிகப்பாக்கும் முக பூச்சுகள்தான். இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்படி சிகப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ்….

சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .

தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முகம் மற்றும் கழுத்து கருமையை போக்கும் வழிமுறைகள்

முகம் மற்றும் கழுத்து கருமையை போக்கும் வழிமுறைகள்



முகத்தில் ஆங்காங்கு கருமையாக இருந்தால், அவர்களின் அழகையே அது கெடுத்து விடும். குறிப்பாக சிலருக்கு கழுத்தில் கருமையாக இருக்கும். இப்படி அழகைக் கெடுக்கும் வகையில் உள்ள கருமையைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் கருமையைப் போக்கலாம்.

• எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் நிறைந்துள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையைப் பின்பற்றிய பின், 24 மணிநேரத்திற்கு வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

• ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து, அதனை கருமையாக உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், கருமையான தழும்புகளை நீக்கிவிடும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.

• ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1/2 எலுமிச்சையை பிழிந்து, பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி 10 நாட்களுக்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

நகத்தைச் சுற்றி தோல் உரிவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

நகத்தைச் சுற்றி தோல் உரிவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்



நகத்தைச் சுற்றி தோல் உரிவதற்கு முக்கிய காரணம் சரும வறட்சி, அதிகப்படியான வெயில், குளிர்ச்சியான காலநிலை, அடிக்கடி கைகளை கழுவுவது, கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவது, வைட்டமின் குறைபாடு போன்றவைகள் தான்.

இது தற்காலிகமானதே. நகங்களைச் சுற்றி தோல் உரிந்தால் அதனை சரிசெய்ய சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

• கற்றாழை ஜெல்லை தினமும் பலமுறை நகங்களைச் சுற்றி தடவி வந்தால், விரைவில் குணமாவதோடு, நகங்களும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

• வாழைப்பழத்தினை மசித்து, அதில் சிறிது புளித்த தயிர், பொடித்த சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து, நகங்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவி, பின் தேங்காய் எண்ணெயை கைகளில் தடவிக் கொள்ள வேண்டும். இந்த முறையை பின்பற்றினாலும் கைவிரல்கள் மற்றும் நகங்களை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

• வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் கைகளை ஊற வைத்து, பின் வைட்டமின் ஈ நிறைந்த எண்ணெயான ஆலிவ் ஆயிலை தடவிக் கொண்டால், கைகளின் அழகு மேம்படும். நகங்களை சுற்றியுள்ள தோலை உரிவதும் தடுக்கப்படும். இதற்கு தினமும் இரு வேளை இம்முறையை செய்து வரவேண்டும்.

• தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை கைவிரல் நகங்களில் தடவி வந்தால், தோல் உரிவது தடுக்கப்படுவதோடு, நகங்களும் நன்கு பொலிவோடு அழகாக காணப்படும்.

மணப்பெண் அழகுடன் திகழ சில நடைமுறைகள்

மணப்பெண் அழகுடன் திகழ சில நடைமுறைகள்



மணப்பெண் மணநாள் அன்று தேவலோக தேவதை போன்று பொலிவுற காட்சிதர வேண்டும் என்றால் அதற்கான சில பிரத்யேக முறைகளை திருமண நாளன்று முன்கூட்டியே நடைமுறை படுத்திட வேண்டும். மணப்பெண் திருமணத்திற்கு முன்பு கையாள வேண்டிய சில நடைமுறைகள்.

மணப்பெண் என்றதும் மனதளவில் சிறு பதட்டம் ஏற்படவே கூடும். எனவே அவற்றை மறந்து சரியான நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்ள வேண்டும். அன்றாடம் 6 மணிநேரம் முதல் 7 மணி நேர உறக்கம் மேற்கொள்ளும் மணப்பெண்ணின் உடல், மனம், முகம் எல்லாம் மிக பிரகாசமாய் ஜொலிக்கும். பெரிய பட்டு புடவை, பெரிய லெஹன்கா போன்றவை மணநாளன்று உடுத்த வேண்டும். ஆனால் மணப்பெண் அதனை அணிய ஏற்ற உடல் திறனின்றி ஒல்லியாக பலமின்றி இருந்தால் நன்றாக இருக்காது.

உடனே நிறைய சாப்பிட்டு உடம்பை குண்டாக ஆக்கிவிட வேண்டாம். முகச்சருமம் மற்றும் உடல் சருமங்களில் இறந்த செல்கள் அப்படியே இருக்கும். அதனை திருமணத்திற்கு முன்பே நமது உடலுக்கு ஏற்ற பூச்சுக்களை கொண்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். நமது வீட்டில் உள்ள பழக்கூழ் மற்றும் பொருட்களை கொண்டும் இதனை செய்யலாம். திருமணத்திற்கு முன்பு ஸ்பா போன்றவை சென்றாலும் இப்பணி மூலம் சருமம் கூடுதல் பொலிவு பெறும். மணப்பெண்ணின் விரல் நகங்கள் பளபளப்பாக திகழ அவ்வப்போது மெனிக்யூர் செய்ய வேண்டும்.

வைரம் போல ஜொலிக்கும் விரல் நகங்களை பெற மெனிக்யூர் செய்வது அவசியம். நல்ல அழகு நிபுணர் மூலம் கவனத்துடன் நகங்களை கையாளுதல் வேண்டும். திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு முழு உடலிற்கும் மெழுகு பூச்சு செய்து உடல் முடிகளை அகற்றிட வேண்டும். மெழுகு பூச்சு செய்வதால் உடனடியாக முடி வளர்ச்சியடையாது. கண் புருவத்தை வடிவமைத்து கொள்ளவும். மெழுகு பூச்சு முடித்து சில நாளில் சருமத்தின் மீது ஏதனும் ஸ்கிரப்ஸ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் சரும் போஷாக்காகும்.

திருமணத்திற்கு சில மாதங்கள் முன்பே மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துவிட வேண்டும். எனவே திருமண நாளிற்கு முன்கூட்டியே ஒருவாரம் முன்பு நாம் வாங்கி வைத்திருக்கும் அலங்காரபொருட்களை அணிந்து மேக்கப் செய்து ஒரு டிரயல் செய்திட வேண்டும். அதேநேரம் அதனை போட்டோ எடுத்து பார்த்து அதில் ஏதேனும் மாற்றம் செய்திட நினைத்தால் அதனையும் மாற்றிடலாம்.

முக வசீகரம் தரும் காய்கறிகள்

முக வசீகரம் தரும் காய்கறிகள் :




அழகை அழகாய் எடுத்து கூறும் வார்த்தை வசீகரம். பார்த்ததுமே, பளிச்சென மனதை கவர்வது முகம் தான்.

முகத்தை அழகாய் வைத்துக் கொள்ள, அழகு நிலையத்தை தேடி ஓடுவது மட்டுமே முடிவல்ல.  காய்கறிகள், பழங்களைக் கொண்டு அழகாய் பேஸியல் செய்து, முகப்பொலிவை பாதுகாக்கலாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

முகத்தின் அழுக்குகளை நீக்கும் உன்னதமான பொருள். பஞ்சில் பாலை நனைத்து முகத்தை கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும்.  துடைத்த பின், ஒரு நிமிடம் வரை நீராவியில் முகத்தை காண்பிக்க வேண்டும்.

இப்படி செய்தால், முகத்தில் உள்ள துளைகள் திறக்கும். பேஸியல் செய்யும் போது முகத்தில் நல்ல பளபளப்பைக் கொடுக்கும்.  காய்கறிகளைப் பொறுத்தவரை, உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் வைத்து பேஸியல் செய்யலாம்.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து, அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானிமெட்டியை சேர்த்து கலக்க வேண்டும்.

முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி கலவையை பூசி, 20 நிமிடங்கள் காயவிட வேண்டும். நன்றாக காய்ந்துவிடக் கூடாது. இதேபோல மற்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.

பழங்களில் ஆஸ்திரேலிய ஆரஞ்ச், பட்டர் ப்ரூட், வாழைப்பழம், ஆப்பிள், கறுப்பு திராட்சை, பப்பாளிப் பழம், தர்பூசணி பழங்களை பயன்படுத்தலாம்.  செவ்வந்தி, பன்னீர் ரோஜா பூக்களையும், பாதாம் பருப்பு, வெள்ளை கொண்டைக் கடலையை அரைத்து, தேன், முல்தானிமெட்டி கலந்து பேஸியலாக பயன்படுத்தலாம்.

பூக்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாம். எந்த வயதினரும் இதை பயன்படுத்தலாம். மாலை நேரத்தில் செய்வதே நல்லது.