Sunday 18 September 2016

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.


குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி அட்டவணை : 

பிசிஜி - பிறப்பின் போது

ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது
ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்
டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்
டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்
டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்
அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்
சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்
எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்
எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்
டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்
ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்
டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்
டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்
ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்
எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆ ண்டுகள்
வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்
வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்
டெட்டானஸ் - 10 ஆண்டுகள்
சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்
டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்

கூந்தல் பராமரிப்பிற்கு எந்த ஷாம்பு சிறந்தது

சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை.

சமீபகாலமாகக் கூந்தல் பராமரிப்புத் தொடர்பாக நம்மிடையே நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை அதிக விலையில் விற்கப்படும் கண்டிஷனர் ஷாம்புகளைத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறிவிடும் என்பதுதான்.

அதுவும் ஷாம்புவை தினமும் தேய்த்துக் குளிக்கலாம் என்று அந்த விளம்பரங்கள் கூறுகின்றன. ஆனால், இது கூந்தலுக்குப் பெருத்த சேதத்தை விளைவிக்கும். இயற்கை பொருள்களான செம்பருத்தி இலை, புங்க மரத்தின் காய், சீயக்காய் ஆகியவற்றைத் தவிர, வேறு எதையும் தினமும் தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லதல்ல.

மூலிகை ஷாம்பு போன்றவை 100% இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷாம்பு என்றாலும்கூட, அதை வாரத்துக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை. தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.

உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தெளிவான புரிதலுடன் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கும்போது அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும்.

Saturday 17 September 2016

தலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள்

தலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள்,








முடி வேகமாக வளர தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாகவும் 
நீண்டும் வளரும்.மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
 
முடி வளர:
 
தேங்காய் எண்ணையில் மருதாணி பூவை ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.
 
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
 
பொடுகை தவிர்க்க:
 
வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவிகுளித்து வந்தால் பொடுகு வராது.
 
வேப்ப இலை மற்றும் துளசி இலையை பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர பேன் மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
 
முடி உதிர்வதை தடுக்க:
 
வெந்தயம் மற்றும் குன்றிமணியை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
 
நரைமுடி கருப்பாக:
 
நரைமுடி கருப்பாக உதவும் கீரை முளைக்கீரை. அடிக்கடி சாப்பிடுங்கள்.
 
எண்ணெயுடன் நெல்லிக்கையை காயவைத்து, பவுடராக்கி, கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை கருப்பாகும்.
 
முடி பளபளப்பாக:
 
அரைத்த வெந்தயத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.
 
5 மில்லி தண்ணீரில் அதிமதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துபின் குளிக்க முடி கருப்பாகி மினுமினுப்பாகும்.
 

தங்க நகைகள் எப்போதும் பொலிவுடன் இருக்க டிப்ஸ்

ஆபரணங்கள் புதிதாக வாங்கியபோது இருந்த பொலிவு, எப்போதும் நீடித்திருக்க, அதற்கான பராமரிப்பை நாம் கொடுத்தாக வேண்டும்.






ஆபரணங்கள் புதிதாக வாங்கியபோது இருந்த பொலிவு, எப்போதும் நீடித்திருக்க, அதற்கான பராமரிப்பை நாம் கொடுத்தாக வேண்டும். அதற்கு…

1. தங்க நகைகளை அணிந்து, கழற்றி வைக்கும்போது, சோப்பு நுரையில் நன்கு அலசி, மென்மையான காட்டன் துணியில் துடைத்து பத்திரப்படுத்தி வைத்தால் எப்போதும் பொலிவுடன் இருக்கும்.

2. அதேபோல, அதிக நாட்கள் நகைப் பெட்டியில் வைத்த நகைகள் செம்மை நிறம் படிந்தோ… பச்சை நிறம் படிந்தோ காட்சி அளிக்கலாம். அதை, பெட்டியிலிருந்து எடுத்து அப்படியே அணியாமல், சோப் நுரையில் அலசி அணிந்தால், ‘புத்தம் புது மலரே’ என பொலிவாக இருக்கும்.

3. அன்றாட பயன்பாட்டுக்கு எப்போதும் போட்டிருக்கும் வளையல், கம்மல் போன்ற நகைகள் பாலிஷ் மங்கி காணப்படும். அவற்றை உடனடியாக பளபளக்க வைக்க ஷாம்புவினால் கழுவலாம். அல்லது, பூந்திக்கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து, அந்தத் தண்ணீரில் கழுவி, மென்மையான துணியால் துடைக்க… ‘தகதக’வென மின்னும்.

4. எப்போதாவது ஒருமுறை அணியும் ஆரம், நெக்லஸ், கல் வளையல் போன்ற நகைகளை ஒன்றோடு ஒன்று உரசாமல், வளையாமல், அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டிகளில் தனித்தனியாக வைப்பது சிறந்தது.

5. நகைகளை அலுங்காமல், குலுங்காமல் வைக்க நகைப்பெட்டி இல்லை அல்லது இருப்பவை போதவில்லை… பீரோவில்தான் வைக்க வேண்டும் என்ற நிலை. என்ன செய்வது..? நகைகளை ‘பனியன்’ மாதிரியான காட்டன் துணியில் சுற்றி, பீரோ லாக்கரினுள் வைக்கலாம். பத்திரமாக இருக்கும். நகைப் பெட்டியில் வைத்தாலும்கூட, அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத நகைகளை இப்படி துணி சுற்றி, அந்தப் பெட்டிக்குள் வைத்தால் பளபளப்பு குறையாது.

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூண்டு

நம் வீட்டு சமையலறையில் உள்ள பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டலாம்.




நம் வீட்டு சமையலறையில் உள்ள பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டலாம். இங்கு அந்த பூண்டை எப்படியெல்லாம் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்களால் முடிந்ததை முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

* 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடேற்றி இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு அலச, தலைமுடியின் வளர்ச்சியைக் காணலாம்.

* பூண்டு எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி ஸ்கால்ப்பில் படும்படி தடவி, விரலால் சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவும் பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

* 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருந்த தொற்றுகள் நீங்கி, மயிர்கால்கள் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.

Friday 16 September 2016

கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி

கூந்தலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் தன்மை கொண்டது கரிசலாங்கண்ணி. அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.


கரிசலாங்கண்ணியை பற்றி தெரியாதவர்களே இல்லை. ஏன் என்றால் இந்த மூலிகை மஞ்சள் காமாலை, ரத்த சோகை, குழந்தை கண்ணுக்கு மை தீட்டுவதற்கு, முடி வளர்ச்சிக்கு, கீரையாகவும் பருப்புடன் மசியலாக சாப்பிடலாம். நிறைய மருத்துவதன்மை வாய்ந்த இந்த மூலிகையை நாம் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும்.

இளநரை மாற :

கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலத்தி, தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் 1/2 தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

தலைமுடி அடர்த்தியாக வளர :

கரிசலாங்கண்ணி இலைகளைப் பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணையில் ஊற வைத்து, தலையில் தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும். முடி உதிர்தலும் கட்டுப்படும்.

முடி கருமையடைய :

ஒரு பிடி கரிசலாங்கண்ணி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துவர வேண்டும். படிப்படியாக இளநரை மாறி கூந்தல் கருமையாக மாறுவதை காணலாம்.

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம், மண்டைப்பகுதி வறண்டு போகாமல் காக்கப்படும்.

 
அந்தக் காலத்துப் பெண்கள், தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் அவர்களது கூந்தலை வறண்டு போகாமல் காத்தார்கள். இன்று தலைக்கு எண்ணெய் வைப்பது என்பது ஏதோ செய்யக்கூடாத விஷயம் என்கிற மாதிரி ஆகிவிட்டது. இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு கூந்தலில் எண்ணெய் பசையே தெரியக்கூடாது. 

அதே நேரம் எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும் கூந்தல் அதற்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இளம் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படுகிற தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பியது மூட நம்பிக்கையாக இருந்தாலும், அப்படி எண்ணெய் வைப்பதன் மூலம் அவர்களது கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டது.

தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம், மண்டைப்பகுதி வறண்டு போகாமல் காக்கப்படும். நுனிப் பிளவு இருக்காது. கூந்தல் தேங்காய் நார் போல முரடாக மாறாது. பிரச்சனைகள் இல்லாத கூந்தல் இயற்கையாகவே ஆரோக்கியமாக வளரும்தானே? கூந்தல் என்பது ஒரு வருடத்துக்கு 6 இன்ச் அளவு வளரும். அது வறண்டு, உடைந்து, உதிர்ந்து கொண்டிருந்தால் எப்படி வளரும்? எனவே, கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகித்து வறண்டு போகாமல் காக்கும்பட்சத்தில் உங்கள் கூந்தலும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அரைத்த வெந்தயத்தைத் தலைக்குத் தடவிக் குளிப்பதன் மூலம் நீளமான முடியைப் பெறலாம். கூந்தலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டியதும் அவசியம். எந்நேரமும் கூந்தலைக் கோதிக் கொண்டும், வாரிக் கொண்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது பின்னல் போட்டு தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும்.

கூந்தல் வளர்ச்சியில் உணவுக்கு மிக முக்கிய பங்குண்டு. கறிவேப்பிலையும் கீரைகளும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். தயிரில் ஊற வைத்த வெந்தயமும் கூந்தலுக்கு நல்லது செய்யும். நட்ஸ், பேரீச்சம்பழம், மீன் மற்றும் வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நீளமான கூந்தலுக்கு வழி செய்யும்.

சீயக்காய் பொடி கூந்தலை இயற்கையான முறையில் சுத்தம் செய்து, பாதுகாக்கும். பொடுகும் இளநரையும் வராமல் தடுக்கும். ஷாம்புவில் உள்ளது போல எஸ்.எல்.எஸ், பாரபென், சிலிக்கான் என எந்த கெமிக்கலும் அதில் இல்லை. கெமிக்கல் இல்லாத பொருட்கள் நல்லது செய்கின்றனவோ இல்லையோ, கெடுதலை ஏற்படுத்தாது என்பது நிச்சயம். எனவே, முழுக்க சீயக்காய்க்கு மாற முடியாதவர்கள், அவ்வப்போது ஒரு மாறுதலுக்கு சீயக்காய் குளியலை முயற்சி செய்யலாம்.